தேசியம்
செய்திகள்

Ontario அரசின் notwithstanding பயன்பாட்டை கண்டித்த பிரதமர் Trudeau

Ontario அரசாங்கம் notwithstanding உட்பிரிவைப் பயன்படுத்துவது தவறானது என பிரதமர் Justin Trudeau Ontario முதல்வர் Doug Ford இடம் கூறியுள்ளார்.

கல்வித் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்வதிலிருந்து தடுக்கும் நோக்கத்துடன் notwithstanding சட்டத்தில் உள்ள உட்பிரிவைப் பயன்படுத்துவது தவறானது என பிரதமர் கூறினார்.

புதன்கிழமை (02) பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின் போது தனது கருத்தை Trudeau தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உரிமைகள் உட்பட கனடியர்கள் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்காக செயல்படுவதன் முக்கியத்துவத்தை Trudeau வலியுறுத்தியதான பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

கல்வித் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய அனுமதிப்பது COVID தொற்று காரணமாக இரண்டு வருட இடையூறுகளை எதிர்கொண்ட மாணவர்கள் மீது ஏற்றுக்கொள்ள முடியாத விளைவை ஏற்படுத்தும் என பிரதமரிடம் Ford கூறியதாக முதல்வர் அலுவலகம் கூறியது.

Related posts

இரண்டு மாதங்களுக்கு $1.5 பில்லியன் உபரியாகப் பதிவானது

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் குழந்தைகள் மருந்துகள் அடுத்த வாரத்தில் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan

எதிர்வரும் புதன்கிழமை இரண்டாம் படிக்கு நகரும் Ontario!

Gaya Raja

Leave a Comment