September 30, 2026
தேசியம்
செய்திகள்

சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடும் எண்ணம் இல்லை: Mark Carney

சீனாவுடன் முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடும் எண்ணம் கனடாவுக்கு இல்லை என பிரதமர் Mark Carney வலியுறுத்தினார்.

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால், அமெரிக்காவுக்குள் செல்லும் அனைத்து கனடிய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump எச்சரித்த மறுதினம் கனடிய பிரதமரின் இந்தக கருத்து வெளியானது.

“சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என Mark Carney ஞாயிற்றுக்கிழமை (26) செய்தியாளர்களிடம் கூறினார்.

கனடா-அமெரிக்கா-Mexico வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளை கனடா மதிக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

CUSMA  ஒப்பந்தத்தின் ஒரு சிறப்புப் பிரிவு, சீனா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை  Mark Carney நினைவுபடுத்தினார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் பணத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள்?

Lankathas Pathmanathan

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

Lankathas Pathmanathan

கனேடியர்களுக்கு மின்னணு விசா சேவைகளை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan

Leave a Comment