தேசியம்
செய்திகள்

புதிய பிரதமர் ஞாயிறு தேர்வு

கனடாவின் புதிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (9) தேர்வாகிறார்.

Liberal கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் புதிய பிரதமரும் ஞாயிறு தேர்வாகின்றார்.

Liberal கட்சியின் தலைமை பதவியை வெற்றி கொள்வதன் மூலம் கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படும் முயற்சியில் Mark Carney, Chrystia Freeland, Karina Gould, Frank Baylis ஆகியோர் உள்ளனர்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau கடந்த January மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

ஞாயிறு அறிவிக்கப்படவுள்ள வெற்றியாளர், Justin Trudeauவுக்கு பதிலாக Liberal கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி ஏற்பார்.

Related posts

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan

Alliston விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan

Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் Patrick Brown

Leave a Comment