September 30, 2026
தேசியம்
செய்திகள்

Ottawa தொகுதியில் போட்டியிடும் பிரதமர்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் Mark Carney Nepean தொகுதியில் போட்டியிட உள்ளார்.

கனடியர்கள் April 28 ஆம் திகதி பொதுத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23)  வெளியிடுவார் என எதிர்வு கூறப்படுகிறது.

பிரதமர் Mark Carney ஆளுநர் நாயகம் Mary Simon-னை ஞாயிறு சந்தித்து நாடாளுமன்றத்தை கலைத்து ஒரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் தலைநகர் Ottawa தொகுதியான Nepean- னில் பிரதமர் Mark Carney போட்டியிடுவார் என தெரியவருகிறது.

இந்த அறிவித்தலை Liberal கட்சி சனிக்கிழமை பிற்பகல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Arya-வின் வேட்புமனுவை கட்சி இந்த வாரம் திடீரென இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொருளாதார முன்னேற்றத்தில் தடை?

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மரணம் 30 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

விரைவில் கனடா முழுவதும் LGBTQ+ பேரணிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment