September 14, 2026
தேசியம்
செய்திகள்

April 28 கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல்

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கனடாவின் பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் பொதுத் தேர்தல் பிரச்சார ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23)  வெளியிடுவார் என எதிர்வு கூறப்படுகிறது.

பிரதமர் Mark Carney ஆளுநர் நாயகம் Mary Simon-னை ஞாயிறு சந்தித்து நாடாளுமன்றத்தை கலைத்து ஒரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி நடைபெறுகிறது.

பரவலாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தல் அழைப்புக்கு இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் மூலம் கனடாவை வழிநடத்த சிறந்தவர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்வதில் முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

Related posts

கனடிய பிரதமர் அடுத்த வாரம் சீனா பயணம்

Lankathas Pathmanathan

அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் பணத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள்?

Lankathas Pathmanathan

Ontario:பல வாரங்களின் பின்னர் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment