தேசியம்
செய்திகள்

உள்நாட்டு வர்த்தக தடைகளை விலக்க பிரதமரும் முதல்வர்களும் இணக்கம்

தேசிய வர்த்தகம், எரிசக்தி வழித்தடத்தை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்ற கனடாவின் பிரதமரும், முதல்வர்களும் இணக்கம் கண்டுள்ளனர் .

புதிய பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை (21)  மாகாண முதல்வர்களை Ottawa-வில் சந்தித்தார்.

உள்நாட்டு வர்த்தக தடைகளை விலக்க இந்த சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

“உலகின் வலுவான, நியாயமான, சுதந்திரமான நாட்டை உருவாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்” என இந்த சந்திப்பின் முடிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Mark Carney தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தூண்டிய வரி கட்டண நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் வளர்ச்சிக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க விரும்புவதாக அவர் கூறினார்.

மாகாணங்களுக்கிடையேயும் மத்திய அரசாங்கத்துடனும் வர்த்தகத் தடைகளை அகற்றுவதற்கு விரைவாக நகர்வது குறித்து இந்த சந்திப்பில் உரையாடப்பட்டது.

மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக கனடிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து விலக்குகளையும் நீக்க தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக Mark Carney கூறினார்.

Related posts

பாதசாரிகளை வாகனத்தால் மோதியது பயங்கரவாத செயல் அல்ல

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து மேலும் ஒருவர் விலகல்?

Lankathas Pathmanathan

ஆயிரம் சர்வதேச தீயணைப்பு படையினரின் உதவி கோரும் British Columbia

Lankathas Pathmanathan

Leave a Comment