தேசியம்
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

கனடிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக தொடர்ந்தும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

மத்திய வங்கியின் இந்த ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் புதன்கிழமை (28) வெளியானது.

இதில் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தது போல வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க மத்திய வங்கி முடிவு செய்தது.

மத்திய வங்கியின் கடந்த வட்டி விகித அறிவித்தல் December 10-ஆம் திகதி வெளியானது.

அன்று மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

மத்திய வங்கி வருடத்திற்கு எட்டு முறை கூடி பணவியல் கொள்கை குறித்து விவாதிப்பதுடன், முக்கிய வட்டி விகித அறிவித்தலையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த வட்டி விகித அறிவித்தல் March 18-ஆம் திகதி வெளியானது.

தொடர்ந்து வட்டி விகித அறிவித்தல்கள் April 29, June 10, July 15, September 2, October 28, December 9 வெளியாகவுள்ளன.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Toronto நகர முதல்வராக தொடர John Tory தீர்மானம்?

Lankathas Pathmanathan

ஐந்தாவது முறையாக பெரும்பான்மை அரசமைக்கும் Saskatchewan கட்சி

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்த பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment