Stellantis அதிகாரிகளுடனான சந்திப்பு சவாலானது என கூறிய Ontario முதல்வர் Doug Ford அவை ஆக்கப்பூர்வமானவை எனத் தெரிவித்தார்.
Brampton Assembly ஆலையை விற்பனை செய்வது தொடர்பாக Stellantis நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் ஒன்றை Doug Ford முன்னெடுத்தார்.
இந்த சந்திப்பு சவாலானதாக இருந்தபோதிலும், ஆக்க பூர்வமானதாக அமைந்ததாக Doug Ford தெரிவித்துள்ளார்.
Brampton ஆலை மூடப்படுவதையோ அல்லது விற்கப்படுவதையோ நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்பதை இந்தச் சந்திப்பில் தெளிவாக எடுத்துரைத்து உள்ளதாக கூறிய Doug Ford, ஆலையை தக்கவைக்க தொடர்ந்து போராடுவோம் என பின்னர் செய்தியாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமது பங்கிற்கு Carbon வரியை நீக்க Stellantis அதிகாரிகள் இந்த சந்திப்பில் வலியுறுத்தினர்.
தமது வாகன தயாரிப்பில் இந்த வரிக் கட்டணங்களால் ஏற்படும் நட்டம் குறித்து அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இல்லாத இத்தகைய செலவினங்களைக் கனடாவும் நீக்கி, இரு நாடுகளுக்கும் இடையே சமமான போட்டிச் சூழலை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என Doug Ford வலியுறுத்தினார்.
Brampton ஆலையை தொடர்ந்து இயங்க வைக்கவும் எதிர்காலத் தயாரிப்புகளுக்கும் தயார் நிலையில் வைத்திருக்க மாகாண அரசு சில மாற்று வழிகளை இந்த சந்தியில் முன்வைத்துள்ளதாக Ontario பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் Vic Fedel தெரிவித்தார்.
இதன் பின்னணியில் அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை தொடர இரு தரப்பினரும் இணங்கினர்.
இந்த சந்திப்பில் Stellantis வட அமெரிக்காவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி Pablo Di S அடுத்த வாரம் கனடா வரவுள்ளதாக Doug Ford தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மத்திய தொழில்துறை அமைச்சர் Mélanie Joly பங்கேற்ற போதிலும் அவர் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனாலும் Carbon வரியை நீக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கனடியப் பாதுகாப்பு நிறுவனமான Roshe-க்கு ஆலையை விற்பனை செய்யும் முடிவில் Stellantis உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது
