தேசியம்
செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா வாக்கெடுப்பு முடிவுகளை கனடா அங்கீகரிக்காது: பிரதமர் Trudeau

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய போலி வாக்கெடுப்புகளின் முடிவுகளை கனடா எப்போதும் அங்கீகரிக்காது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

புதன்கிழமை (28) உக்ரைன் அதிபரிடம் பேசி கனடிய பிரதமர் இந்த உறுதிப்பாட்டை மீண்டும் வழங்கினார்.

September 23 முதல் 27 வரை ரஷ்ய அரசாங்கம் உக்ரைனில் நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பொதுவாக்கெடுப்புகளை நடத்தியது.

இதில் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக குடியிருப்பாளர்கள் பெருமளவில் வாக்களித்ததாகக் மாஸ்கோ சார்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden உட்பட பல மேற்கத்திய தலைவர்களுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பை ஒரு போலி என பிரதமர் Trudeau விமர்சித்தார்.

Related posts

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

குறைவடையும் வேலையற்றோர் விகிதம்!

வெளிநாடுகளுடன் கூட்டுச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத் துரோகிகள்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Leave a Comment