Halifax சர்வதேச மூன்று நாள் பாதுகாப்பு மாநாடு 2026 ஆரம்பமானது.
இந்த ஆண்டு மாநாட்டில் உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்கள் முதன்மைப் பெற்றுள்ளன.
உலகளாவிய பாதுகாப்பு, புவிசார் அரசியல் சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த வருடாந்த சர்வதேசப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், சர்வதேச வல்லுநர்கள் Halifax நகரில் திரண்டுள்ளனர்
இந்த மாநாட்டில் Russia–Ukraine யுத்தம், உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள் குறித்து தீவிர ஆலோசனை முன்னெடுக்கப்படுகிறது.
நீடித்து வரும் இந்த யுத்தம் இந்த வருடாந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் இராணுவப் பதற்றங்கள், ஜனநாயக நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு, Arctic பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
