கனடா அமெரிக்காவின் 51-ஆவது மாநிலம் என்ற விடயத்தில் Donald Trump தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளார் என வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாடு மாறவில்லை என வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் Karoline Leavitt தெரிவித்தார்.
கனடிய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்ததில் இருந்து கனடா குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் தொனி மென்மையாகிவிட்டது என்ற கருத்தை Karoline Leavitt நிராகரித்தார்.
கனடா குறித்த தனது நிலைப்பாட்டில் ஜனாதிபதி தொடர்ந்து உறுதியாக உள்ளார் என அவர் கூறினார்.
அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக மாறுவதன் மூலம் கனடியர்கள் பெரிதும் பயனடைவார்கள் என Donald Trump நம்புவதாக Karoline Leavitt தெரிவித்தார்.