தேசியம்
செய்திகள்

குறைவடைந்தது வேலையற்றோர் விகிதம்!

January மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் குறைவடைந்தது.

வெள்ளிக்கிழமை (06) வெளியான புள்ளிவிபரத் திணைகள தகவலின் படி January மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.

December மாதத்தை விட வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது இதற்கான காரணியாக கூறப்பட்டுள்ளது.

December 2025-இல் 6.8 சதவீதமாக இருந்த வேலையற்றோர் விகிதம், 0.3 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.

கனடிய பொருளாதாரம் January மாதத்தில் 25,000 வேலைகளை இழந்த போதிலும் வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்தது.

இது September 2024-க்கு பின்னரான மிகக் குறைந்த வேலையற்றோர் விகிதமாகும்.

வேலை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்தது வேலையற்றோர் விகித குறைவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

வேலையற்றோர் விகிதம் January மாதம் குறையும் என பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழில் காப்புறுதி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Mark Carney பெரும்பான்மை அரசமைக்க கூடிய சாத்தியம்?

Lankathas Pathmanathan

Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment