தேசியம்
செய்திகள்

மீண்டும் Liberal கட்சியில் இணையும் Han Dong?

Liberal கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong மீண்டும் கட்சியில் இணைவது குறித்த உரையாடல் நிகழவுள்ளது.

இந்த விடயம் குறித்து உரையாட பிரதமரின் மிகவும் நம்பிக்கையான அமைச்சர்களில் ஒருவர் எதிர்வரும் வாரங்களில் Han Dongகை சந்திக்கவுள்ளார்.

விரைவில் Han Dongகை நேரில் சந்திக்கவுள்ளதாக அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlanc புதன்கிழமை (19) கூறினார்.

Torontoவில் உள்ள Don Valley வடக்கு தொகுதியில் 2019ஆம் ஆண்டு முதலில் வெற்றி பெற்ற Han Dong, 2021 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சீனா உதவியது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த March மாதம் அவர் Liberal அரசாங்க குழுவில் இருந்து விலகி இருந்தார்.

Han Dong மீதான குற்றச்சாட்டு தவறானது என கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட David Johnston வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் Han Dong விரும்பினால் Liberal அரசாங்கத்தில் மீண்டும் இணையலாம் என பிரதமர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

COVID-19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

Omicron பரவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாகாணங்கள்

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு: Conservative  தலைவர் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment