February 16, 2025
தேசியம்
செய்திகள்

வணிக வாகன திருட்டு விசாரணையில் 15 பேர் கைது

Toronto பெரும்பாகம் அளவிலான வணிக வாகன திருட்டு விசாரணையில் 73 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த விசாரணையில் Peel பிராந்திய காவல்துறையினர் 15 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் பொருட்கள் ஏற்றப்பட்ட வணிக வாகனங்களை திருடி, அந்த பொருட்களை விற்பனை செய்ததாக இந்த விசாரணையில் தெரியவருகிறது.

Project Big Rig என பெயரிடப்பட்ட இந்த விசாரணை கடந்த March மாதத்தில் ஆரம்பமானதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த விசாரணையில் Peel, York, Halton பிராந்திய காவல்துறையினரும், Toronto நகர காவல்துறையினர், Ontario மாகாண காவல் துறையினரும் பங்கேற்றனர்

இந்த விசாரணையில் 28 கொள்கலன்களில் 6.99 மில்லியன் டொலர் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

2.25 மில்லியன் டொலர் பெறுமதியான மேலும் 28 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன

இதன் மூலம் மீட்கப்பட்ட மொத்த மதிப்பு 9.24 மில்லியன் டொலர் என புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan

Ottawa காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் படுகாயம்

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

Leave a Comment