தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய Erin O’Toole

Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து Erin O’Toole முறைப்படி விலகியுள்ளார்.

புதன்கிழமை (02) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பெரும்பான்மையான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.
O’Tooleலை அடுத்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்ட தலைமை மதிப்பாய்வு வரை தலைவராக இருக்க Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கவில்லை.
118 Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களில் 73 பேர் O’Tooleலை தலைமை பதவியில் இருந்து  நீக்குவதற்கு வாக்களித்தனர்,
இந்த வாக்கெடுப்பை தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் O’Toole தனது முறையான பதவி விலகல்  கடிதத்தை கட்சியின் தலைமைக்கு சமர்ப்பித்தார்.
ஆனாலும் தொடர்ந்தும் Durham தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்ற உள்ளதாக O’Toole தெரிவித்தார்
கனடா நமது வரலாற்றின் இக்கட்டான தருணத்தில் உள்ளது என தனது பதவி விலகல் குறித்த அறிக்கையில்  O’Toole குறிப்பிட்டார்.

Related posts

தேர்தல்களை இலக்காகக் கொண்ட கனடாவுக்கு எதிரான நடவடிக்கை: CSIS எச்சரிக்கை!

Gaya Raja

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 23ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment