தேசியம்
செய்திகள்

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி!

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Brampton நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை பிராந்திய உறுப்பினர் Martin Medeiros கடந்த வாரம் முன்வைத்திருந்தார். இந்த முன்மொழிவு ஏகமனதாக நகரசபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனாலும் இந்த நினைவுத் தூபியின் பெயரை தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி என மாற்றம் செய்யவேண்டும் என ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இன்று (புதன்) நடைபெற்ற மெய்நிகர் நகரசபை அமர்வில் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது..

இதன் மூலம் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்ற பெயரில் இருந்து தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி என்ற பெயர் மாற்றம் பெறுகின்றது. இந்த நினைவுத்தூபி எதிர்வரும் May மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் அமைக்கப்படும் என Brampton நகர முதலவர் Patrick Brown கடந்த வாரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

September 10ஆம் திகதிக்குள் Conservative கட்சிக்கு புதிய தலைவர்

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகத்தில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!