தேசியம்
செய்திகள்

Toronto துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்

Torontoவில் நிகழ்ந்த மூன்று துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.

செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் Regent Park பகுதியில் நிகழ்ந்த மூன்று துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு ஆண் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது ஆண் சம்பவ இடத்திலேயே இறந்தார் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையில்  இரண்டு அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களின் காயங்கள் “உயிருக்கு ஆபத்தில்லாதவை” என விவரிக்கப்படுகின்றன.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஒருவர் கைதானார்.

கைது செய்யப்பட்ட நபர் எந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

Ontario மாகாண கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள்!!

Gaya Raja

Leave a Comment