தேசியம்
செய்திகள்

Quebec மாகாண பற்றாக்குறை $11 பில்லியன்

Quebec மாகாண அரசாங்கம் 11 பில்லியன் டொலர் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தது.

இது Quebec மாகாண வரலாற்றில் மிகப்பெரிய பற்றாக்குறையாகும்.

Quebec நிதி அமைச்சர் Eric Girard செவ்வாய்கிழமை 158 பில்லியன் டொலர் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

பொருளாதாரம், காட்டுத்தீ, பொதுத்துறையில் பில்லியன் டொலர்கள் ஊதிய உயர்வு ஆகியவை மாகாணத்தின் வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாக நிதி அமைச்சர் Eric Girard தெரிவித்தார்.

2024-25 நிதியாண்டுக்கான Quebec வரவு செலவு திட்டத்தில் மாகாணத்தின் வரவு செலவு எப்போது சம நிலைக்கு திரும்பும் என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

2029-30 நிதியாண்டிற்குள் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Eric Girard செவ்வாயன்று உறுதியளித்தார்.

இது 12 மாதங்களுக்கு முன்னர் அவர் கணித்ததை விட இரண்டு ஆண்டுகள் தாமதமாகும்.

எதிர்க்கட்சியான Liberal கட்சி இந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை கடுமையாக விமர்சித்தது.

2018 இல் Liberal கட்சி பதவியை விட்டு வெளியேறியபோது, Quebec மாகாணத்தில் சுமார் $7 பில்லியன் உபரியாக இருந்தது என கட்சியின் நிதி விமர்சகரான Frédéric Beauchemin கூறினார்.

Related posts

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்புவது குறித்த கேள்விகளை தவிர்க்கும் அமைச்சர்

Lankathas Pathmanathan

B.C. NDP தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment