தேசியம்
செய்திகள்

முழுமையான முடக்கம்? இன்று (வியாழன்) முதல்வர் Ford அறிவிப்பார்!

Ontarioவில் இன்று (வியாழன்) புதிய COVID நடவடிக்கைகள் குறித்த அறிவித்தல் ஒன்று வெளியாகவுள்ளது.

மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார். இந்த அறிவித்தல் Toronto, Peel பிராந்தியம், York பிராந்தியம் ஆகிய பகுதிகளில் முழுமையான முடக்கமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.

இது மாகாணத்தின் தொற்றுக்கான பரவல் கட்டுப்பாட்டில் மிக முக்கியமான முடிவாக அமையும் என முதல்வர் Ford அறிவித்தார். நாளாந்தம் அதிகரித்து வரும் நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு மத்தியில் COVID பரவுவதைத் தடுக்க உதவும் புதிய நடவடிக்கையாக இது அமையுமெனவும் முதல்வர் Ford கூறினார்.

குறிப்பாக Toronto, Peel பிராந்தியம், York பிராந்தியம் ஆகியவற்றில் அதிகரித்துவரும் தொற்றுக்களின் எண்ணிக்கையை எதிர்கொள்வது சிக்கலானதுடன் அவசியமானது எனவும் Ford சுட்டிக்காட்டினார். இந்தப் பகுதிகளில் தொற்று ஆபத்தான விகிதத்தில் பரவுவதாகக் கூறிய முதல்வர், தற்போதைய நிலையில் இந்தப் பகுதிகளில் முழுமையான முடக்கம் சாத்தியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய அறிவித்தல் மதியம் 1 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியாகவுள்ளது.

 

Related posts

Ontarioவில் மூன்று வாரங்களில் முதல் முறையாக 200க்கும் அதிகமான தொற்றுக்கள் !

Gaya Raja

Scarborough கத்திக் குத்தில் 12 வயது சிறுமி பலி! சகோதரர் கைது?

Lankathas Pathmanathan

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment