தேசியம்
செய்திகள்

கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது!

காட்டுத்தீ காரணமாக கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது.

காட்டுத்தீ, வடக்கு Albertaவிலிருந்து Atlantic வரை நீண்டு, நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் காற்றின் தரத்தை மோசமாக்குகிறது.

Beijing நகரை விட Torontoவின் வடகிழக்கில் உள்ள Peterborough நகரில் காற்று மாசுபாடு மோசமாக இருப்பதாக உலக காற்று தரக் குறியீடு சுட்டிக்காட்டுகிறது.

Albertaவில் காட்டுத்தீயின் நிலைமை மேம்பட்டுள்ளது.

இதன் காரணமாக Alberta மாகாண அவசரகால நிலை முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் வடக்கு Albertaவின் சில பகுதிக.ளிலும், வடக்கு British Colombia , Northwest Territories பகுதிகளிலும் சுற்றுச்சூழல் கனடாவினால் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ புகை மோசமான காற்றின் தரத்தை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

சனிக்கிழமை (03) வரை Albertaவில் காட்டுத் தீயினால் ஒரு மில்லியன் hectare நிலத்திற்கு மேல் எரிந்துள்ளது .

Nova Scotia மாகாணத்தின் Halifax பகுதியில் காட்டுத் தீ 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்தனர்.

Greater Montreal பகுதி உட்பட Quebecகின் சில பகுதிகளில் சுற்றுச்சூழல் கனடா புகைமூட்டம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Quebecகில் தொடரும் காட்டுத் தீ காரணமாக, சுற்றுச்சூழல் கனடா காற்றின் தர அறிக்கைகளை தென்மேற்கு, கிழக்கு, வடக்கு Ontario பகுதிகளுக்கு வெளியிட்டுள்ளது.

Ontarioவில் மோசமான காற்றின் தரம் நாளை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் Toronto நகரை விட 11 மடங்கு பெரிய நிலப்பரப்பு கடந்த நான்கு நாட்களில் காட்டுத்தீயால் எரிந்துள்ளது.

Related posts

Nova Scotiaவில் 30 சென்றி மீற்றருக்கும் அதிகமான பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

British Colombiaவில் ஒரு RCMP அதிகாரி பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!