தேசியம்
செய்திகள்

வரவு செலவு திட்டம் குறித்து Conservative தலைவர் எச்சரிக்கை

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்தும் நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக Conservative தலைவர் Pierre Poilievre எச்சரிக்கின்றார்.

இதனை தவிர்க்க இரண்டு நிபந்தனைகளை திங்கட்கிழமை (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Pierre Poilievre கோடிட்டுக் காட்டினார்.

பணவீக்கம், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்காக வரவு செலவு திட்டத்தை சமநிலைப்படுத்தும் திநடவடிக்கையை முன்வைக்க மத்திய அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் carbon விலையை அதிகரிப்பதை Liberal அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோருகிறார்.

தமது இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாவிட்டால், வரவு செலவு திட்டத்தை தடுப்பதற்குத் திருத்தங்கள் உட்பட அனைத்து நடைமுறைகளை தனது கட்சிகள் முன்னெடுக்கும் எனவும் Pierre Poilievre தெரிவித்தார்.

Related posts

மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் சுகாதார சீர்திருத்தங்களைத் தொடர Alberta தயார்

Lankathas Pathmanathan

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja

Nova Scotia காட்டுத்தீயில் 200 வீடுகளும் கட்டடங்களும் சேதம்

Lankathas Pathmanathan

Leave a Comment