Toronto Blue Jays அணி World Series பட்டத்தை வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை தவற விட்டது.
Los Angeles Dodgers அணி மீண்டும் World Series பட்டத்தை வெற்றி பெற்றது.
World Series 2025 தொடரின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை (01) நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் Dodgers அணி வெற்றி பெற்றது.
ஏழு ஆட்டங்கள் கொண்ட தொடர் 3-க்கு 3 என்ற சமமான நிலையில், இறுதி ஆட்டம் சனி இரவு Rogers மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் Dodgers அணி Blue Jays அணியை 5-க்கு 4 என்ற ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Dodgers அணி World Series பட்டத்தை வெற்றி பெற்றது.
