தேசியம்
செய்திகள்

5.2 சதவீதமாக உள்ள கனடிய வேலையற்றோர் விகிதம்

கனடியப் பொருளாதாரம் கடந்த மாதம் 108,000 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கடந்த மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதமாக இருப்பதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

கடந்த மாதம் நாடளாவிய ரீதியில் அதிகூடிய வேலையற்றோர் விகிதம் Newfoundland and Labrador மாகாணத்திலும், அதிகுறைந்த வேலையற்றோர் விகிதம் Quebec மாகாணத்திலும் பதிவானது.

Newfoundland and Labrador மாகாணத்தில் வேலையற்றோர் விகிதம் 10.3 சதவீதமாகவும், Quebec மாகாணத்தில் வேலையற்றோர் விகிதம் 4.1 சதவீதமாகவும் பதிவானது.

தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, ஊதியம் ஆண்டு அடிப்படையில் அதிகரித்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், October மாதத்தில் ஊதியம் 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

Freeland துன்புறுத்தப்பட்டது குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

நான்காவது அலையின் பரவலை தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது!

Gaya Raja

அமெரிக்காவிடம் தடுப்பூசி உதவிகளை கோரியுள்ள கனடா : வெள்ளை மாளிகை தகவல்

Gaya Raja

Leave a Comment