September 30, 2023
தேசியம்
செய்திகள்

அமைச்சரவை மாற்றும் பிரதமர் Trudeau – தேர்தலுக்கு தயாராகின்றாரா?

பிரதமர் Justin Trudeau நாளை (செவ்வாய்) தனது அமைச்சரவை மாற்ற திட்டமிட்டுள்ளார்.

அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்கவுள்ளனர்.

அமைச்சர் Navdeep Bains அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் François-Philippe Champagne, Bains வகித்த கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சை ஏற்கவுள்ளார். போக்குவரத்து அமைச்சர் Marc Garneau, புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில் புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக Omar Alghabra பதவி ஏற்கவுள்ளார்.

காலை 9 மணிக்கு இந்த அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் COVID காரணமாக, முதலாவது மெய்நிகர் அமைச்சரவை அமர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் நிதியமைச்சர் Bill Morneau பதவி விலகிய பின்னர் கடந்த August மாதம் Trudeau lதனது அமைச்சரவையை மாற்றியிருந்தார். அந்த நேரம் நிதியமைச்சராக Chrystia Freeland பதவி ஏற்றிருந்தார்.

Related posts

Albertaவில் 756 பாடசாலைகளில் தொற்றுகள் அறிவிப்பு!

Gaya Raja

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Akwesasne Mohawk சமூகத்திற்கு மத்திய அரசு நிதியுதவி

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!