February 12, 2025
தேசியம்
செய்திகள்

மக்களின் அடிப்படை சுதந்திரங்களை இடைமறிப்பது தீவிரமானது: பிரதமர் Trudeau

கனடியர்களின் அடிப்படை உரிமைகள் மீதான Ontario அரசாங்கத்தின் தாக்குதலை பிரதமர் Justin Trudeau தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மக்களின் அடிப்படை உரிமைகள் சுதந்திரங்களை இடைமறிப்பது மிகவும் தீவிரமானது என Torontoவில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கூறினார்.

Ontarioவில் நிகழ்ந்திருப்பது கனடியர்களுக்கு கிடைக்கக்கூடிய மிக அடிப்படையான உரிமைகளில் ஒன்றான கூட்டு பேரம் பேசுதல் மீதான தாக்குதலாகும் எனவும் Trudeau சுட்டிக் காட்டினார்.

வெள்ளியன்று ஆரம்பமான வேலை நிறுத்தம் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கவனத்தில் எடுப்பதாக Trudeau கூறினார்.

Ontario அரசாங்கம் notwithstanding உட்பிரிவைப் பயன்படுத்துவது தவறானது என பிரதமர், Ontario முதல்வர் Doug Ford இடம் ஏற்கனவே கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை Ontario கல்வி தொழிற்சங்கங்களுடன் பேசியதாகவும் Trudeau தெரிவித்தார்.

Related posts

முதலாவது  சர்வதேச பயணத்தை ஆரம்பித்துள்ள ஆளுநர் நாயகம்! 

Gaya Raja

Hong Kong பயணித்த கனடியர் ஒருவருக்கு Omicron மாறுபாடு உறுதி

Lankathas Pathmanathan

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment