November 15, 2025
தேசியம்
செய்திகள்

முதல் முறையாக World Series தொடரின் ஏழாவது ஆட்டத்தில் Blue Jays!

Toronto Blue Jays அணி முதல் முறையாக World Series தொடரில் ஏழாவது ஆட்டத்தில் போட்டியிடுகிறது.

World Series 2025 தொடர் இறுதி ஆட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இம்முறை World Series தொடரில் Blue Jays அணியும் Los Angeles Dodgers அணியும் எதிர்கொள்கின்றன.

ஏழு ஆட்டங்கள் கொண்ட தொடர் 3-க்கு 3 என்ற நிலையில் சமமாக உள்ளது.

இந்த நிலையில் தொடரின் ஏழாவதும், இறுதியுமான ஆட்டம் சனிக்கிழமை (01) இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது.

இதன் மூலம் March 18 அன்று Tokyo-வில் ஆரம்பித்த இந்த ஆண்டுக்கான Baseball ஆட்டங்கள், சனி இரவுடன் கனடாவில் முடிவடைகிறது.

இந்த ஆட்டத்தில் Blue Jays அணியின் ஆரம்ப பந்துவீச்சாளராக Max Scherzer அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி World Series பட்டத்தை வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடரில் போட்டியிடுகிறது.

Dodgers அணி கடந்த ஆண்டு World Series தொடரில் வெற்றி பெற்றது.

Related posts

தென்கிழக்கு ஆசியாவில் கனடா தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமான தடை June 21 வரை நீட்டிப்பு

Gaya Raja

தடுப்பூசி பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கு 2.7 மில்லியன் டொலர்

Lankathas Pathmanathan

Leave a Comment