November 15, 2025
தேசியம்
செய்திகள்

தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயார்: Mark Carney

அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ள மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் Mark Carney சமிச்சை காட்டினார்.

சிறுபான்மை Liberal அரசின் இலையுதிர் கால வரவு செலவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை (04)  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

Mark Carney அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம், அவரது அரசாங்கத்தின் முதல் சோதனையாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் அமைகிறது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மற்றொரு கட்சியின் மூன்று வாக்குகள் தேவையான நிலை  Mark Carney அரசாங்கத்திற்கு உள்ளது.

இந்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற தேவையான ஆதரவு அரசாங்கத்திடம் உள்ளதாக என தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய-Pacific பொருளாதார ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney-யிடம் சனிக்கிழமை (01) ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத பிரதமர், இந்த நேரத்தில் நாட்டுக்கு சரியான வரவு செலவுத் திட்டம் இது என்ற 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்.

வரவு செல்வது திட்டத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அரச தரப்பில் இருந்து தெரியவருகிறது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னணியில் ஒரு தேர்தலைத் தூண்ட விரும்புவதாக Liberal அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வரவு செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவை பெறுவதற்கு அவர்களிடம் பேசி வருவதாக அரசாங்க அவைத் தலைவர் Steven MacKinnon இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் நத்தார் கால தேர்தலை ஏற்படுத்த Conservative தலைவர் Pierre Poilievre முயற்சிப்பதாக Steven MacKinnon கூறினார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சி ஆதரிக்காத ஒரு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதன் மூலம் அரசாங்கம் தேர்தலை கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக தனது கட்சி கருதுவதாக Conservative கட்சியின் அவைத் தலைவர் Andrew Scheer கூறினார்.

நாடாளுமன்றத்தில் Liberal அரசாங்கம் 169 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.

ஏனைய கட்சிகள் 174 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்

Conservative 144, Bloc Québécois 22, NDP 7, பசுமைக் கட்சி ஒன்று என ஆசன பகிர்வு அமைகிறது.

இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற, Liberal அரசாங்கம் எதிர்க்கட்சிகளில் ஒன்றின் ஆதரவைப் பெற வேண்டும்.

அல்லது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு இறுதியாக April 2024-இல் முழுமையான வரவு செலவுத் திட்டத்தையும், கடந்த ஆண்டு இறுதியில் இலையுதிர் கால பொருளாதார அறிக்கையையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் தலையீடு?

Lankathas Pathmanathan

British Colombia தடுப்பூசிகளுக்கு இடையிலான நாட்களை குறைக்கிறது !

Gaya Raja

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment