November 15, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினேன்: கனடிய பிரதமர் 

அமெரிக்க ஜனாதிபதியிடம் தான் மன்னிப்பு கோரியதாக கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan-னின் குரலைக் கொண்ட Ontario அரசின் வரி எதிர்ப்பு விளம்பரம் தொடர்பாக கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியது.

இதனால் கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்வதாக திடீரென அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, கனடாவுக்கு எதிராக மேலதிகமாக 10 சதவீத வரியை அறிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வரி எதிர்ப்பு விளம்பரத்திற்காக பிரதமர் Mark Carney மன்னிப்பு கோரியதாக Donald Trump தெரிவித்தார்.

இந்த விளம்பரத்தால் Donald Trump “புண்படுத்தப்பட்டதால்”, தான் மன்னிப்பு கோரியதாக பிரதமர் Mark Carney சனிக்கிழமை (01) உறுதிப்படுத்தினார்.

ஆசிய-Pacific பொருளாதார ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு தென் கொரிய ஜனாதிபதி Lee Jae-Myung வழங்கிய இரவு விருந்தில் பிரதமர் Mark Carney, ஜனாதிபதி Donald Trump-பிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

பிரதமர் என்ற முறையில், அமெரிக்காவுடனும், ஜனாதிபதியுடனான உறவுக்கு தான் பொறுப்பு என Mark Carney கூறினார்.

ஆசிய நாடுகளுக்கான ஒன்பது நாள் பயணத்தை முடித்த போது நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்க அரசாங்கத்துடனான வெளிநாட்டு உறவுகளுக்கு மத்திய அரசு பொறுப்பு என்பதையும் கனடிய பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக குற்றம் சாட்டப்படும் விளம்பரத்தை Ontario மாகாணம் ஒளிபரப்பக்கூடாது என்ற தனது எண்ணத்தை தான் Ontario முதல்வர் Doug Ford-டிடம் தெரிவித்ததாகவும்  Mark Carney கூறினார்.

Mark Carney-யுடன் தனக்கு மிகச் சிறந்த உறவு இருப்பதாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் Donald Trump கூறியிருந்தார்.

Mark Carney மன்னிப்பு கோரிய போதிலும், கனடாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுகள் ஆரம்பிக்காது எனவும் Donald Trump கூறினார்.

உலக நாடுகளில் அமெரிக்காவுடன் கனடா தொடர்ந்தும் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டுள்ளது எனக் கூறிய Mark Carney, கனடா-அமெரிக்கா வர்த்தகத்தின் பெரும்பகுதி கனடா-அமெரிக்கா-Mexico வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வருவதால், அவை வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என குறிப்பிட்டார்.

Related posts

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் இதுவரை 18 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்!

Lankathas Pathmanathan

பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Montreal நபர்

Lankathas Pathmanathan

முன்கூட்டிய வாக்கெடுப்பில் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வாக்குப்பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment