London, Ontario அருகே பேருந்து விபத்துக்கு உள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார் – சிறுவர்கள் நால்வர் காயமடைந்தனர்.
நெடுஞ்சாலை 401 இல் பாடசாலை பேருந்து ஞாயிற்றுக்கிழமை (02) விபத்துக்கு உள்ளானதாக Ontario மாகாண (OPP) காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த நான்கு சிறுவர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
42 பேரில் பயணித்த பேருந்தில் எத்தனை மாணவர்கள் பயணித்தனர் என்ற விபரம் வெளியாகவில்லை.
விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
52 வயதான ஓட்டுநரின் மரணத்திற்கான காரணம் குறித்து கண்டறியும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
