November 15, 2025
தேசியம்
செய்திகள்

தலைமைத்துவ மதிப்பாய்வில் வெற்றி பெறுவேன்: Pierre Poilievre நம்பிக்கை 

எதிர்வரும் January மாதம் நடைபெறவுள்ள  தலைமைத்துவ மதிப்பாய்வில் தான் வெற்றி பெறுவேன் என Conservative தலைவர் Pierre Poilievre நம்பிக்கை தெரிவித்தார்.

கடத்த April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், Pierre Poilievre கட்டாய மதிப்பாய்வை எதிர்கொள்கிறார்.

இதில் வெற்றி பெற்று அடுத்த தேர்தலில் தனது கட்சியை தான் வழிநடத்துவேன் என மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக Pierre Poilievre நம்பிக்கை தெரிவித்தார்.

January மாத தலைமைத்துவ மதிப்பாய்வும், அடுத்த பொதுத் தேர்தலும் தனக்கு வெற்றியாக அமையும் என CBC தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Pierre Poilievre கட்டாய தலைமை மதிப்பாய்வை January மாதம் எதிர்கொள்வார்.

இந்த மதிப்பாய்வில் அவர் கட்சியின் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பதை Conservative கட்சியின் நாடாளுமன்ற குழு தீர்மானிக்கும்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர், கட்சியின் தலைவர் பதவி விலகாவிட்டால், தலைவராக அவரது எதிர்காலம் குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என Conservative கட்சியின் அரசியலமைப்புச் சட்டம் கோருகிறது.

Pierre Poilievre-ரின் தலைமை குறித்து அவரது கட்சி வாக்களித்து தீர்மானிப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 20 ஆண்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்திய Ottawa தொகுதியை April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Pierre Poilievre இழந்தார்.

ஆனாலும் அவரது கட்சி 24 புதிய தொகுதிகளையும், 42 சதவீத மக்களின் வாக்குகளையும் கடந்த தேர்தலில் பெற்றது.

August மாதம்  Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு Pierre Poilievre திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சியின் தலைவராக நீடித்த கடைசி Conservative தலைவர் Stephen Harper ஆவார்.

இவர் 2005 தேர்தல் தோல்வியின் பின்னர், கட்சியின் தலைமைத்துவ மதிப்பாய்விலும், அடுத்த பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று,10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார்.

Pierre Poilievre-ருக்கு முன்னர் இரண்டு Conservative தலைவர்களான Erin O’Toole, Andrew Scheer ஆகியோர் முறையே 2021, 2019 தேர்தல்களில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Related posts

பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja

Montreal: கத்திக் குத்தில் மூவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment