November 21, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவுடன் ‘நியாயமான’ வர்த்தக ஒப்பந்தத்தை நாடுகிறது அமெரிக்கா: Donald Trump அறிவிப்பு!

கனடாவுடன் அமெரிக்கா ஒரு ‘நியாயமான’ வர்த்தக ஒப்பந்தத்தை நாடுகிறது என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் Donald Trump வெள்ளிக்கிழமை (20) இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சீனாவுடனான வர்த்தக உறவுகளை கனடா விரிவுபடுத்தி வரும் சூழலில், “கனடா இப்போது அதிக துணிச்சலுடன் உணர்கிறது” எனவும் Donald Trump கூறினார்.

சீனாவுடனான கனடாவின் அண்மைய நெருக்கம் குறித்தும், கனடாவின் ஏனைய நகர்வுகளைக் கண்டு அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் இந்த கருத்து வெளியானது.

இந்த வாரம் நடைபெற்ற APEC உச்சி மாநாட்டில் பங்கேற்ற கனடியப் பிரதமர் அங்கு சீன ஜனாதிபதியை சந்தித்தார்.

சீனாவில் Mark Carney, Donald Trump நேரடி சந்திப்பின் பின்னர் ஒரு இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளை இரு நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை என்றால் கனடாவுக்கு வேறு பல முக்கியப் பணிகள் உள்ளன எனக் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாண Sunshine பட்டியல் வெளியானது

Lankathas Pathmanathan

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை எல்லையை திறக்கும் எண்ணம் இல்லை- கனேடிய பிரதமர்

Gaya Raja

கனடா : COVID தொற்றின் பரவல் மோசமடைகிறது!

Gaya Raja

Leave a Comment