British Columbia மாகாணத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் Conservative கட்சி பதவியேற்றது.
மாகாணத்தின் 38-வது முதல்வராக Lorne Doerkson வெள்ளிக்கிழமை (20) பதவியேற்றார்.
அவருடன் புதிய அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டது.
Victoria-வில் உள்ள அரசு மாளிகையில் நடைபெற்ற விழாவில், துணைநிலை ஆளுநர் Wendy Cocchia புதிய முதல்வர், அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சரவில் துணை பிரதமரும், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சருமாக Claire Rattée பதவி ஏற்றார்.
நிதியமைச்சராக Peter Milobar பதவி ஏற்றார்.
வேளாண்மைத் துறை அமைச்சராக Ian Paton, சுகாதாரத்துறை அமைச்சராக Ryan Peterson பதவி ஏற்றனர்.
முன்னாள் NDP முதல்வர் David Eby கடந்த September மாதம் திடீர் தேர்தலை அறிவித்தார்.
இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் Conservative கட்சியின் இடைக்காலத் தலைவராக Lorne Doerkson தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிளவுபட்டிருந்த கட்சியை ஒருங்கிணைத்த அவர், October இறுதியில் நடைபெற்ற தேர்தலில் கட்சியை வரலாற்று வெற்றிக்கு வழி நடத்தினார்.
1928-ஆம் ஆண்டின் பின்னர் பி.சி. மாகாணத்தில் அமையும் முதல் Conservative பெரும்பான்மை அரசு இதுவாகும்.
மொத்தமுள்ள 93 தொகுதிகளில் Conservative கட்சி 63 இடங்களைக் கைப்பற்றியது.
NDP கட்சி வெறும் 27 இடங்களுக்கு சுருங்கியதால் David Eby NDP கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
