September 14, 2026
தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் கனடா

உக்ரைனின் வான் பாதுகாப்புக்கு ஆதரவாக வெடி மருந்துகளையும்  ஏவுகணைகளையும் கனடா  அனுப்புகிறது.

கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (15) ஒரு அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது.

சுமார் 8 ஆயிரம் பீரங்கி வெடி மருந்துகளையும், 12 வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்ப கனடா முடிவு செய்துள்ளது.

கனடா, உக்ரைனுக்கு 1,800க்கும் மேற்பட்ட பயிற்சி வெடி மருந்துகளையும் வழங்கவுள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து பிரதமர் Justin Trudeauவின் Liberal அரசாங்கம் $1 பில்லியன் இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

Related posts

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan

கனடிய அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் சந்திப்பு?

Lankathas Pathmanathan

World Series 2025: ஐந்தாவது ஆட்டத்தில் Blue Jays வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment