Scarborough Southwest தொகுதி நகரசபை உறுப்பினராக பார்த்தி கந்தவேள் மீண்டும் பதவியேற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் Scarborough Southwest தொகுதியில் பார்த்தி கந்தவேள் மீண்டும் வெற்றி பெற்றார்.
தமிழ்-கனடிய நகரசபை உறுப்பினரான அவர் தனது புதிய பதவி காலத்திற்கான சத்திய பிரமாணத்தை திங்கட்கிழமை (16) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
தனது பதவியேற்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், குடும்பத்தினர், ஆதரவாளர்களுடன் இந்தச் சிறப்பு தருணத்தைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில் தனக்குத் துணை நின்ற குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் Scarborough Southwest தொகுதியில் அனைவரும் இணைந்து உருவாக்கவிருக்கும் திட்டங்களை நோக்கித் தனது பணி தொடரும் என உறுதியளித்துள்ளார்.
கடந்த October 26 நடைபெற்ற Toronto நகரசபைத் தேர்தலில் பார்த்தி கந்தவேள் 12,231 வாக்குகளைப் (35.99%) பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
2023 இடைத்தேர்தலில் முதல் முறையாக நகரசபை உறுப்பினராக வெற்றி பெற்ற இவருக்கு, இது முழுமையான நான்காண்டு நகரசபை பதவிக் காலமாகும்.
Toronto நகர சபையின் 2026–2030 புதிய பதவி காலத்தின் முதல் சம்பிரதாயபூர்வ கூட்டம் புதன்கிழமை (18) நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
