September 28, 2026
தேசியம்
செய்திகள்

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை Ontario-வில்

குளிர்கால புயல் காரணமாக Ontario மாகாணத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை திங்கட்கிழமை (29) மாலை தொடர்கிறது.

Ontario மாகாணத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு, உறைபனி மழை தாக்கும் நிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.

புயல் காரணமாக மாகாணம் முழுவதும் சுமார் 61 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கி உள்ளதாக Ontario மாகாணத்தின் மிகப்பெரிய மின்சார பயன்பாட்டு நிறுவனமான Hydro One கூறுகிறது.

மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் திங்களன்று தொடர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படலாம் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் Ottawa-வில் உறைபனி மழை முதல் Timmins நகரில் 60 CM பனிமழை வரை எதிர்வு கூறப்படுகிறது.

தென்மேற்கு Ontario-வில் மணிக்கு 90 KM வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் ஆரம்பித்த ஞாயிற்றுக்கிழமை (28) முதல் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கியுள்ளதாக Hydro One கூறுகிறது.

ஆனாலும் சாலை நிலைமைகள் பணியாளர்களுக்கு சவால்களை ஏற்படுத்துவதாகவும் Hydro One  தெரிவித்தது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Lankathas Pathmanathan

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment