தேசியம்
செய்திகள்

நான்கு பேர் பலியான Hamilton  தீ தடுக்கப்பட்டிருக்கக் கூடியது!

நான்கு பேர் பலியான Hamilton  தீ, தடுக்கப்பட்டிருக்கக் கூடியது என Ontario தீயணைப்பு பிரிவின் தலைவர் Jon Pegg தெரிவித்தார்.

கடந்த வாரம் Hamilton நகரில் வீடொன்று தீப்பிடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர்.

இந்த வீட்டில் smoke alarmகள் இருந்திருந்தால், இந்த தீ விபத்தை தடுத்திருக்கலாம் என  தீயணைப்பு பிரிவின் தலைவர்  தெரிவித்தார்.

வீடுகளில் தீ அச்சுறுத்தல் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

இதுவரை நடந்த விசாரணையில், குறிப்பிட்ட இல்லத்தில் smoke detectors செயல்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு நபர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு Ontario மாகாணத்தில் தீ தொடர்பான 133 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இது Ontarioவில் கடந்த 20 ஆண்டுகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணங்களாகும்.

Related posts

இங்கிலாந்தின் கனேடிய உயர் ஸ்தானிகராக Ralph Goodale நியமிக்கப்பட்டுள்ளார்

Gaya Raja

Manitoba பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது!

Gaya Raja

Fairview Mall துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

Leave a Comment