September 30, 2026
தேசியம்
செய்திகள்

ஈரான் தாக்குதலில் கனடாவின் பங்கேற்பை முற்றாக நிராகரிக்க மறுக்கும் Mark Carney?

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கனடா இணைவதை கனடிய பிரதமர் முற்றாக நிராகரிக்க மறுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கனடா பங்கேற்காது என உறுதியாகக் கூறுவாரா என ஆஸ்திரேலியாவில் பயணத்தில் உள்ள கனடிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த Mark Carney , இராணுவ “பங்கேற்பை ஒருபோதும் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது” என கூறினார்.

“அது அர்த்தமுள்ளதாக இருந்தால், நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கனடா “எப்போதும் கனடியர்களை பாதுகாக்கும்” எனத் தெரிவித்த Mark Carney, எங்கள் நட்பு நாடுகள் கோரும் போது நாங்கள் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் ஈரானில் கனடாவின் ஈடுபாடு ‘அநேகமாக சாத்தியமில்லை’: என நிபுணர்கள் கூறுகின்றனர்.

NATO ஒப்பந்தத்தின் ஐந்தாவது பிரிவின் கீழ் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் கனடா இணைவது “அநேகமாக சாத்தியமில்லை” என முன்னாள் NATO தளபதி ஒருவர் கூறினார்.

Related posts

33 ஆயிரம் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை?

Lankathas Pathmanathan

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

முன்னாள் கனடிய தமிழர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகிறார்?

Lankathas Pathmanathan

Leave a Comment