Hamilton Stelco ஆலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 175 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 1-ஆம் திகதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க நிர்வாகம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பணி நீக்கம் செய்த அனைத்து 175 தொழிலாளர்களையும் December 1 முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப அழைக்க உள்ளதாக Stelco அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொழிலாளர் சங்கங்கள், அரசியல் தலைவர்களின் கடும் அழுத்தங்களை தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் Stelco நிறுவனத்தின் அமெரிக்க உரிமையாளர் Cleveland-Cliffs Inc Hamilton ஆலையில் உள்ள 175 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக தொழில்துறை அமைச்சர் Melanie Joly கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
தவிரவும் Stelco நிறுவனத்தைத் தேசியமயமாக்க வேண்டும் எனப் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) தலைவர்கள் கனடிய பிரதமரிடம் வலியுறுத்தி வந்தனர்.
தொடர் அரசியல் அழுத்தங்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு மத்தியில், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து 175 தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த நிர்வாகம் தற்பொழுது முன்வந்துள்ளது.
December 1 முதல் அவர்கள் மீண்டும் தங்கள் வழக்கமான பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
அமெரிக்க வர்த்தகப் போர் மத்தியில் Brampton Stellantis ஆலை விற்பனை சர்ச்சைகளால் கனடியத் தொழிலாளர்கள் கவலையில் உள்ள சூழலில், Stelco நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு 175 தொழிலாளர் குடும்பங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
