கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் (Canadian Tamils’ Chamber of Commerce – CTCC) தனது புதிய நிர்வாக சபையை அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
கனடாவில் தமிழ் வர்த்தகர்கள், தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் முதன்மை அமைப்பான CTCC கடந்த வார விடுமுறையில் இந்த புதிய நிர்வாக சபையை தேர்ந்தெடுத்தது.
சமூகத்தில் நன்கு அறியப்பட்ட சட்டத்தரணியான விது ராமச்சந்திரன், சம்மேளனத்தின் புதிய தலைவராகப் போட்டியின்றி அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விது ராமச்சந்திரன் Serene Law, ராமச்சந்திரன் Law Professional Corporation ஆகியவற்றின் நிர்வாக சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார்.
முன்னதாக அவர் சம்மேளனத்தின் உள் விவகாரங்களுக்கான துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2020 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், Ajax-Pickering வர்த்தக சபையின் (Board of Trade) இயக்குநராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு தவணைகளாக சம்மேளனத்தின் தலைவராகப் பணியாற்றிய அரி A. அரியரனைத் தொடர்ந்து விது ராமச்சந்திரன் இப்பதவியைப் பொறுப்பேற்கிறார்.

தவிரவும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான துணைத் தலைவர்களாக தர்ஷன் ஸ்ரீதரன் (Executive VP), ஷோபிகா சாந்தலிங்கம் (VP Internal Affairs), சந்திரன் இராமகிருஷ்ணா (VP Finance) ஆகியோர் தெரிவாகினர்.
மேலும் துணைத் தலைவர்களாக கரன் கனகசபை (VP Membership), கயன் கணேசலிங்கம் (VP External Relations), திரு கோபிராஜ் (VP Marketing, Communications, and Data Management) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இம்முறை இயக்குநர் சபைக்கு மகேன் சிங்கராஜ, நாதன் தியாகராஜா, சுவன் பூபாலசிங்கம், ரூபேந்திரன் ஜனேந்திரன் ஆகியோர் தெரிவாகினர்.
இதில் ஒரு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
துணைத் தலைவர் (Membership) பதவிக்கு கரன் கனகசபை, தீபன் ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் கரன் கனகசபை அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற, தீபன் ராஜ் தோல்வியடைந்தார்.
தவிரவும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட இயக்குநர் சபைக்கு இம்முறை ஐவர் போட்டியிட்டனர்.
இதில் ராஜராஜன் சுப்ரமணியம் இயக்குநர் சபைக்கு தெரிவாகவில்லை.
கனடாவில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களின் பொருளாதார வளர்ச்சி, தொழில்முறைத் தொடர்புகள், புதிய வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன புதிய நிர்வாகக் குழு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
