Ontario Liberal கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பாளர்களுக்கு இடையிலான இறுதி நேரடி விவாதம் நடைபெற்றது.
புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த விவாதம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நான்கு முக்கிய வேட்பாளர்களும், தற்போதைய முதல்வர் Doug Ford அரசியல் பாணிக்கு தாங்களே சரியான மாற்று என தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டனர்.
TVO Today Live ஊடகவியலாளர் Steve Paikin வழிநடத்திய இந்த விவாதத்தில் Navdeep Bains, Stephanie Bowman, Lee Fairclough, Dylan Marando ஆகிய நால்வரும் பங்கேற்றனர்.
பொருளாதாரம், சுகாதார சீர்திருத்தங்கள், மாகாணத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கும் Liberal கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற பல்வேறு பொதுவான விவகாரங்களில் வேட்பாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக்களை கொண்டிருந்தாலும், வரி விதிப்புக் கொள்கைகளில் அவர்களுக்குள் சில முக்கிய வேறுபாடுகள் வெளிப்பட்டன:
மாகாண அரசியலில் ஒரு தீவிரமானதும் பொறுப்பானதுமான மாற்றத்தைக் கொண்டு வர தங்களால் மட்டுமே முடியும் என வேட்பாளர்கள் அனைவரும் இந்த விவாதத்தின் மூலம் Liberal வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Bonnie Crombie பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது John Fraser கட்சியின் இடைக்காலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
Ontario Liberal கட்சி உறுப்பினர்கள் இந்த மாதம் தமது அடுத்த நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
