தேசியம்
செய்திகள்

Mark Carney அரசாங்கத்தின் எதிர்காலப் பொருளாதாரக் கொள்கையைத் தீர்மானிக்கும் வரவு செலவுத் திட்டம்!

பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கம் தனது  வரவு செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது.

நிதியமைச்சர் François-Philippe Champagne இந்த வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கிறார்.

Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கம் தனது இரண்டாவது முழுமையான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.

பெரும் அரசியல், பொருளாதார எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுகிறது.

இதில் கனடா தன் விதியைத் தானே தீர்மானிக்கும் நிலையை வகுக்கும் என நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சராசரி கனடியர்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், நாட்டின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வருவதே இந்த வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதில் வாழ்வாதார செலவு நெருக்கடிக்கு தீர்வு, புதிய குடிவரவு எண்ணிக்கையில் குறைப்பு, வட்டி விகித சூழலும் நிதிப் பற்றா குறையும், புதிய வீடு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தக நிதிகள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதிநிலை அறிக்கை, Mark Carney அரசாங்கத்தின் எதிர்காலப் பொருளாதாரத் திசையை தீர்மானிப்பது மட்டுமன்றி, வரவிருக்கும் இடைத் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்

Gaya Raja

மூன்று இடைத் தேர்தல்களில் முன்கூட்டிய வாக்களிப்பு தொடர்கிறது

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் அண்மைய வரி விதிப்பு: கனடிய பிரதமர் உடனடியாக பதிலளிக்க மாட்டார்?

Lankathas Pathmanathan

Leave a Comment