February 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவை இறுதி இலக்காக கொண்டு பயணித்தோம் – நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் தேசியத்திற்கு செவ்வி

இலங்கையில் இருந்து கப்பலில் பயணிக்க ஆரம்பித்த போது கனடா தமது இறுதி இலக்காக இருந்தது என நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவரான வினோ தெரிவித்தார்.

தமது பயணம் குறித்து தேசியத்திற்கு வினோ பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.

தமது கடல் பயணம் மியன்மார் நாட்டில் இருந்து ஆரம்பமானதான கூறிய அவர், 45 நாட்களில் கனடாவை சென்றடைவீர்கள் என பயண முகவர்கள் தம்மிடம்  உறுதியளித்ததாக கூறினார்.

மூன்று தினங்கள் பழுதடைந்த கப்பலுடன் மாலுமிகளினால் கைவிடப்பட்ட நிலையில் ஜப்பான் நாட்டுக் கப்பலில் தாங்கள் மீட்கப்பட்டு வியட்நாம் அழைத்துச் செல்லப்பட்டதாக வினோ கூறினார்.

தாங்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதைகளை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை தங்களை பொறுப்பேற்க வேண்டும் எனவும் வினோ தனது செவ்வியில் கூறினார்.

2009, 2010ஆம் ஆண்டுகளில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கனடாவை வந்தடைந்த Ocean Lady, Sun Sea ஆகிய கப்பல்களை பின் தொடர்ந்து தமது பயணம் அமையவில்லை எனவும் அவர் தந்து பேட்டியில் கூறினார்

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான கடல் பயணங்களை முன்னெடுக்க வேண்டாம் என கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஏற்கனவே புகலிட கோரிக்கையாளர்களிடன் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது போன்ற ஆபத்தான பயணங்களும் அதன் விளைவுகளும் பேரழிவை ஏற்படுத்தும் என ஹரி ஆனந்தசங்கரி இந்த வார ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் நினைவு படுத்தியிருந்தார்.

Related posts

முடிவுக்கு வந்த Royal வங்கியின் தொழில்நுட்ப சவால்

Lankathas Pathmanathan

ரஷ்ய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

Lankathas Pathmanathan

விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment