September 11, 2026
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண செயற்கை நுண்ணறிவுத் துறை  இணை அமைச்சராக தமிழர் நியமனம்!

Ontario மாகாண செயற்கை நுண்ணறிவுத் துறை (Artificial Intelligence Adoption) இணை அமைச்சராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த துறையின் இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் Doug Ford வியாழக்கிழமை (10) அறிவித்த புதிய அமைச்சரவை மாற்றத்தின் கீழ் இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Ontario மாகாண அமைச்சரவையை வியாழன்று முதல்வர் மாற்றியமைத்தார்.

இதில் விஜய் தணிகாசலத்தை முந்தைய மனநலம்,  போதைப்பொருள் ஒழிப்பு இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றிய Doug Ford, புதிய செயற்கை நுண்ணறிவுத் துறை இணை அமைச்சராக நியமித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார சவால்களில் இருந்து Ontario மாகாணத்தைப் பாதுகாப்பதற்கான மாகாண அரசின் முக்கிய உத்தியாக இந்தத் துறை நோக்கப்படுகிறது.

மாகாண வரலாற்றில்  முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தத்தெடுப்பு துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை பெருமையாக கருதுவதாக விஜய் தணிகாசலம் சமூக ஊடக பதினொன்றில் தெரிவித்தார்.

அமைச்சர் Vic Fedeli, முதல்வர் Doug Ford ஆகியோருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Floridaவில் LGBTQ நிகழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்த Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

கனடா தினத்திற்கு வானவேடிக்கைகள் இரத்து?

Lankathas Pathmanathan

COVID தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் ஆரம்பிக்கின்றன

Lankathas Pathmanathan

Leave a Comment