தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா எப்போதும் தயார்: Mark Carney

அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கனடா எப்போதும் தயாராக உள்ளது என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

Calgary நகரில் வியாழக்கிழமை (10) செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் தான் சமீபத்திய நாட்களில் பேசியதாகவும் Mark Carney உறுதிப்படுத்தினார்.

தான் ஜனாதிபதி Donald Trump-புடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறிய Mark Carney, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளின் தலைவர்கள் இடையில் இருக்கும் தகவல் தொடர்பு வழிகள் துண்டிக்கப்படவில்லை என்பதை பிரதமர் Mark Carney இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடனான அண்மைய உரையாடம் உலகளாவிய நிகழ்வுகள் குறித்து அமைந்ததாக அவர் கூறினார்.

இரு நாடுகளும் இறக்குமதிப் பொருட்கள் மீது பரஸ்பரம் புதிய வரிகளை விதித்துள்ள தற்போதைய பதற்றமான சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கனடா அமெரிக்கா வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் Mark Carney தனது அமைச்சரவையை கூட்டி பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தன!

Gaya Raja

மருந்தக கட்டமைப்பு சட்டத்தை வலியுறுத்தும் NDP தலைவர்

Lankathas Pathmanathan

Sudburyயில் சுரங்கப் பாதையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்!

Gaya Raja

Leave a Comment