தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலுக்கான முதலாவது அதிகாரப்பூர்வ விவாதம்

Toronto நகர முதல்வர் தேர்தலுக்கான முதலாவது அதிகாரப்பூர்வ நேரடி விவாதத்தில் மூன்று பிரதான வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த விவாதம் Daily Bread Food Bank அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இதில் தற்போதைய நகர முதல்வர் Olivia Chow அவரை எதிர்க்கும் Brad Bradford, Chris Alexander ஆகிய மூவர் மட்டுமே முன்னிலை வேட்பாளர்களாக பங்கேற்றனர்.

திங்கட்கிழமை (14) நடைபெற்ற இந்த விவாத மேடையில் Toronto நகர முதல்வர் வேட்பாளர்கள் தங்கள் கொள்கைகளை முன்வைத்துத் தீவிர வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

TTC வாராந்த கட்டண உச்சவரம்பு, பாடசாலை மதிய உணவுத் திட்ட நீட்டிப்பு, அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்களை முன்வைத்து Olivia Chow இந்த விவாதத்தில் ஈடுபட்டார்.

Scarborough East LRT, Union புகையிரத நிலையத்தில் புதிய காவல் சாவடி, அதிரடி நகர முதல்வர் அதிகாரங்கள் உள்ளிட்ட விடங்களை முன்வைத்து Brad Bradford விவாதத்தில் பங்கேற்றார்.

பொருளாதார மேம்பாடும் வேலைவாய்ப்பும், AI தரவு மையங்களுக்கு ஆதரவு, சட்டம் ஒழுங்கும் வலுவான நிர்வாகமும் ஆகிய உறுதிமொழிகளை Chris Alexander தனது விவாதத்தில் குறிப்பிட்டார்.

October 26 அன்று தேர்தலுக்கு முன்னதாக, இந்த மூவருக்கு இடையேயான மேலும் விவாதங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

Alberta : Wood Buffalo பிராந்திய நகராட்சியில் அவசர கால நிலை அறிவிப்பு!

Gaya Raja

Conservative கட்சியினரிடையே Mark Carney-க்கு போட்டியாளர் யார்?

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment