தேசியம்
செய்திகள்

Belleville யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரி உட்பட இருவர் காயம்!

Belleville நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Belleville பகுதியில் உள்ள யூத வழிபாட்டு தலம் (Synagogue) ஒன்றின் வெளியே ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.

ஞாயிறு இரவு சுமார் 7:10 மணியளவில், Sons of Jacob Synagogue வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

யூத சமூகத்தினர் தங்களின் புனித நாளான Yom Kippu வழிபாட்டிற்காக கூடியிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை காவல்துறை அதிகாரி எதிர்கொண்ட போது இந்த துப்பாக்கி பிரயோகம் நிகழ்ந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அதிகாரியும், மற்றொரு நபரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்புக்காக எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என Belleville காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், மாகாணத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) இந்த  விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்திற்கு Ontario மாகாண முதல்வர் Doug Ford கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தனக்கு மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், காயமடைந்த அதிகாரி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Toronto யூத வழிபாட்டு தலங்கள், வழிபாட்டு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரும் Conservatives – Bloc Québécois

Lankathas Pathmanathan

Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

Torontoவில் Blue Jays அணியின் முதலாவது தொடர்

Lankathas Pathmanathan

Leave a Comment