September 30, 2026
தேசியம்
செய்திகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் Doug Ford அறிமுகப்படுத்தியுள்ள மாற்றங்கள்

Ontario மாகாணத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்களை, Doug Ford அரசாங்கம் இறுதி நேரத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் முதல்வர் தனது தொலைபேசி பதிவுகளை வெளியிட வேண்டும் என கோரிய நீதிமன்றத் தீர்ப்பை Doug Ford அரசாங்கம் நிராகரித்தது.

இந்த மாற்றங்கள் Ontario மாகாணத்தின் 2026 -ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்பட்டன.

March மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டம், இரண்டு சுற்று விவாதங்களில் நிறைவேறியுள்ளது.

Doug Ford அரசாங்கம் சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான தனது முயற்சியை வேகப்படுத்தியது.

சட்டமன்ற  உறுப்பினர்கள் ஒரு வார கால விடுமுறைக்குச் செல்வதற்கு முன்னர், இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, Progressive Conservative அரசாங்கம் ஒரு நள்ளிரவு விவாதத்திற்கு புதன்கிழமை (22) ஏற்பாடு செய்தது.

வியாழக்கிழமை (24) நடைபெற்ற கேள்வி நேரத்திற்குப் பின்னர், Doug Ford அரசாங்கம் இந்தச் சட்டத்தை 57-க்கு 33 என்ற வாக்கு வித்தியாசத்தில்  நிறைவேற்றியுள்ளது.

Ontario மாகாணத்தின் தகவல், தனியுரிமை ஆணையம் (Ontario’s information and privacy commission) இந்த சட்டமூலத்தை கைவிடுமாறு அரசாங்கத்தைக் வலியுறுத்தி இருந்தது.

இது Ontario மாகாணத்தை கனடாவில் உள்ள எந்த ஒரு அதிகார வரம்பையும் விட குறைவான பாதுகாப்பும் குறைவான வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றும் என் எச்சரிக்கப்பட்டது.

ஆனாலும் இந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத Doug Ford அரசாங்கம், ஒரு காலாவதியான சட்டத்தைப் புதுப்பிப்பதாக வாதிட்டு வருகிறது.

Related posts

துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய தினம் பிரகடனம்

Lankathas Pathmanathan

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள் தேர்வில் மோசடி செய்ததற்காக வீடு விற்பனை உரிமையை இழந்தனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment