September 28, 2026
தேசியம்
செய்திகள்

வாகனம் மோதியதில் காவல்துறை அதிகாரி படுகாயம் – 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

Toronto காவல்துறை அதிகாரி மீது வாகனம் மோதிய சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, Leaside பாலத்தில் அதிகாரி மீது வாகனம் ஒன்று மோதியது.

திங்கட்கிழமை (15) அதிகாலையில் Toronto நகரின் கிழக்குப் பகுதியில் ஒரு வாகனத்தின் மீது புலனாய்வாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து, அதிகாரி ஒருவர் வாகனம் மோதி காயமடைந்ததாக Toronto காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் காவல்துறை அதிகாரிக்கு பலத்த, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது

அதிகாலை சுமார் 1 மணியளவில், Donlands Avenue and O’Connor Drive பகுதியில் வாகனம் திருட்டு தொடர்பாக அதிகாரிகள் அங்கு அழைக்கப்பட்டனர்.

“அதிகாரிகள் வாகனத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நிலையில்அந்த வாகனம் ஒரு அதிகாரி மீது மோதியது,” என காவல்துறை தெரிவித்தது.

இந்த வாகன ஓட்டுநர் கண்டுபிடிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள 12 வயது சிறுவன் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின்படி பெயர் வெளியிட முடியாத நிலை உள்ளது.

இதில் மற்றொரு சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார்.

ஆனால் அவர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Ontario மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

Mortimer and Donlands சந்திப்புக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் இந்த சம்பவம் தொடர்புடையது என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்தத் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, ஒருவர் உயிருக்கு ஆபத்தில்லாத, ஆனால் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.

Related posts

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள் வெளியேற உதவும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

Markham நகரிலும் தமிழின நினைவுத்தூபி அமைக்கத் திட்டம்

Lankathas Pathmanathan

ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment