September 12, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஒப்பந்தம் கனடிய பொருளாதாரத்தை அடியோடு அழித்திருக்கும்!: Doug Ford

கனடா – அமெரிக்கா இடையில் இறுதி கட்டத்தில் முறிந்த வர்த்தக ஒப்பந்தம் “முற்றிலும் மோசமானது” என Ontario முதல்வர் Doug Ford விமர்சித்தார்.

அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் கனடாவின் பொருளாதாரம் முழுமையாக அழிந்திருக்கும் எனவும் Doug Ford செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்க வர்த்தக போரினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கான Ontario மாகாண அரசு சார்பில் விரிவுபடுத்தப்பட்ட கட்டண ஆதரவுத் திட்டங்களை Doug Ford வியாழக்கிழமை (10) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதன் மூலம் உள்நாட்டுத் தொழில்களும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளும் முழுமையாக பாதுகாக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

அமெரிக்காவுடனான  வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து Mark Carney அரசு விலகிய முடிவை Doug Ford தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணியாமல் கனடிய தொழிலாளர்களின் நலன், நாட்டின் தன்னாட்சியை காக்க மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது என அவர் மீண்டும் பாராட்டினார்.

மத்திய Liberal அரசுடன் மாகாண Progressive Conservative கட்சி  கைகோர்த்து, நாட்டின் பொருளாதார பாதுகாப்பிற்காக Donald Trump நிர்வாகத்தை எதிர்த்து நிற்பது கனடிய அரசியலில் பெரும் திருப்பு முனையாகக் கருதப்படுகிறது.

Related posts

இஸ்ரேல் சென்றடைந்தார் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

July இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும்

Gaya Raja

Calgary பேருந்து விபத்தில் ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment