Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Cathay Wagantall பதவி விலகினார்.
Saskatchewan மாகாணத்தில் Yorkton—Melville தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் செவ்வாய்க்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக பதவி விலகினார்.
2015 முதல் அவர் இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்.
இதன் மூலம், இந்த ஆண்டில் பதவி விலகிய பத்தாவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையை அவர் அடைந்துள்ளார்.
August மாத இறுதியில் தான் பதவி விலகப்போவதாக Cathay Wagantall கடந்த June மாதத்தில் அறிவித்தார்.
தான் முதலில் தனது பதவிக் காலத்தை முடிக்கத் திட்டமிட்டிருந்ததாக கூறிய அவர், திடீரென நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
